காங்கோ ஜனநாயகக் குடியரசின் சுகாதார அமைச்சகம், நாட்டின் கிழக்கு மாகாணமான இடுரியில் எபோலா நோயால் 80 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. எபோலா வைரஸின் அரிய வகையான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வகை வைரஸ் பாதிப்பு எட்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா முலம்பா கூறினார்.
உறுதி செய்யப்பட்ட முதல் பாதிப்பு, புனியா நகரில் உள்ள 'எவாஞ்சலிக்கல் மருத்துவ மையத்தில்' உயிரிழந்த ஒரு செவிலியருக்கு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. காய்ச்சல், ரத்தப்போக்கு, வாந்தி மற்றும் கடும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் அந்தச் செவிலியர் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நோய் மேலும் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக டி.ஆர். காங்கோ அரசு தெரிவித்துள்ளது.