ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ்: அமெரிக்க சுவிசேஷகரும், லைஃப் அவுட்ரீச் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனருமான ஜேம்ஸ் ராபின்சன் (82), மே 16 ஆம் தேதி இரவு காலமானார். அவரது மரணச் செய்தியை அவரது குடும்பத்தினரும், அவருடன் பணியாற்றியவர்களும் உறுதிப்படுத்தினர்.
"லைஃப் டுடே" தொலைக்காட்சி ஊழியத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விசுவாசிகளுக்கு நற்செய்தியைக் கொண்டு சென்ற ஜேம்ஸ் ராபின்சன், ஏழைகளுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டிய தனது பரோபகாரப் பணிகளுக்காகவும் குறிப்பிடத்தக்கவர்.
பல கிறிஸ்தவத் தலைவர்களும், ஊழியப் பணியாளர்களும் சமூக ஊடகங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவருடன் நீண்டகாலமாகப் பணியாற்றிய சக ஊழியர்கள், ஜேம்ஸை ஒரு "ஆன்மீகத் தந்தை" என்று நினைவுகூர்கின்றனர்.
உலகெங்கிலும் உள்ள விசுவாசிகள், அவரது மனைவி பெட்டி ராபின்சன் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், லைஃப் டுடே குழுவினருக்கும் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.