ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செப்டம்பர் மாதம் இந்தியா வருவார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்வார். ஓராண்டு காலத்தில் புதின் மேற்கொள்ளும் இரண்டாவது இந்திய வருகை இதுவாகும்.