இந்தியாவில் CNG விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு கிலோ CNG-யின் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், டெல்லியில் CNG-யின் புதிய விலை ரூ. 83.09 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும், CNG விலையில் மொத்தம் ரூ. 7 உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் ஏற்படும் நான்காவது விலை உயர்வு இதுவாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 72 டாலரிலிருந்து 86 டாலராக உயர்ந்துள்ளது.