ஒலிம்பிக் வீரரும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்றவரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளருமான ராஜா ரந்தீர் சிங் காலமானார். இவர் அர்ஜுனா விருது பெற்றவர் என்பதோடு, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராகவும் திகழ்ந்தவர்.
ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை ரந்தீர் சிங் பெற்றிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் அப்பதவியிலிருந்து விலகினார்.