ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானம் 215-க்கு 208 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானத்திற்கு, நான்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், தற்போது பரிசீலனைக்காக செனட் சபைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.