ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா தனது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியக் குடிமக்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவுறுத்தலை மீண்டும் வலியுறுத்துகிறோம். தற்போது ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.