ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 90 டாலருக்கும் குறைவாகக் குறைந்தது.
ஜார்ஜியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்தார். ஈரானுடனான ஒப்பந்தம் இந்த வார இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அந்த ஒப்பந்தம் ஐரோப்பாவில் கையெழுத்தாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.