குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் சேவைகளை வழங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்தத் தடை, ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற அனைத்து முக்கிய தளங்களுக்கும் பொருந்தக்கூடும். இந்த கட்டுப்பாடுகளின் முதல் கட்டம் மார்ச் 2027-க்குள் அமலுக்கு வரக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடையை விதிப்பதன் மூலம், குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவம் திரும்பக் கிடைக்கும் என்று கெய்ர் ஸ்டார்மர் உறுதியளிக்கிறார்.