முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரளாவின் நடவடிக்கையை அனுமதிக்காது விஜய் தலைமையிலான அரசு

By: 600001 On: Jun 19, 2026, 4:29 PM

 

 

முல்லைப் பெரியாறில் புதிய அணை ஒன்றைக் கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை அனுமதிக்கப்போவதில்லை என்று ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு தனது முதல் கொள்கை விளக்க உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பொறுப்பையும் வகிக்கும் கேரள ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், வியாழக்கிழமையன்று சட்டப்பேரவையில் இந்தக் கொள்கை விளக்க உரையை வாசித்தார்.

தமிழகத்தின் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், நீர்மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்தக் கொள்கை விளக்க உரை கூறுகிறது. அணைய பலப்படுத்தும் பணிகளுக்குத் தடை விதித்து வரும் கேரளா, புதிய அணையைக் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.