நீட் (NEET) உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி 'காக்ரோச் ஜனதா கட்சி' (Cockroach Janata Party) தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே போராட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரை விட்டு வெளியேறப்போவதில்லை என்று அபிஜித் தீப்கே தெரிவித்தார். மேலும், இந்தப் போராட்டத்திற்கான அனுமதியை நீட்டிக்குமாறு டெல்லி காவல்துறையிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.