மக்களவையில் ஜிதேந்திர சிங் பொதுத் தேர்வுத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை அத்துமீறல்கள் குறித்து அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் அவையில் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.