ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கியூஷு (Kyushu) தீவில் உள்ள குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் கடற்கரைப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3.28 அடி உயரம் வரையிலான அலைகள் எழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் கடற்பகுதிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.