பி.பி. செரியன்
லண்டன்: பிரிட்டனின் மிட்ல்ஸ்பரோவில் நிகழ்ந்த சாலை விபத்தில், இரு காவலர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். A-66 நெடுஞ்சாலையில் தவறான திசையில் வந்த வோக்ஸ்வேகன் பாசாட் (Volkswagen Passat) கார் ஒன்று, காவல் துறை வாகனம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
சனிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. காரில் பயணித்த மைக்கேல் ராபர்ட் காஹில் (23), தியோ ரே (17), கோல் ராபர்ட் வொர்த்தி (16), ஜேக்கப் மதுசியாக் (23), மெக்கே சாடிங்டன் (18) மற்றும் பணியில் இருந்த காவலர்களான மேத்யூ பிளேட்ஸ் (38), டாம் க்ளஃப் (37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காவலர்கள் உயிரிழந்ததை கிளீவ்லேண்ட் காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து 'காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம்' (IOPC) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.