பி.பி. செரியன்
நியூயார்க்: அமெரிக்காவில் 9/11 தாக்குதல்கள் நடந்து 25 ஆண்டுகள் ஆகியும், அத்தாக்குதல்கள் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக FBI எச்சரித்துள்ளது.
FBI-யின் துணை இயக்குநர் கிறிஸ் ராயா (Chris Raya) இத்தகவலைத் தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாதக் கருத்துகளால் மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுப்பது மிகவும் கடினமான காரியம் என்று அவர் கூறினார்.
பெரிய அளவிலான தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும், அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) போன்ற அமைப்புகள் அமெரிக்காவிற்குள்ளேயே 'தனிநபர் தாக்குதலாளிகளை' (lone offenders) உருவாக்க முயற்சிப்பதாக FBI தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் பொதுமக்களின் விழிப்புணர்வே முதன்மையான பாதுகாப்பு அரணாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.