செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் மற்றும் அதன் வளர்ச்சியின் வேகத்தை குறைக்கவும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அழைப்புகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அயர்லாந்துக்கு விஜயம் செய்துள்ள ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் AI ஐ விமர்சிப்பவர்களை "தீய சக்திகள்" என்று நிராகரித்தார், அவர்கள் உண்மையில் நடக்காத காட்சிகள் பற்றிய கவலைகளை எழுப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.