தொழில்நுட்ப நிறுவனமான 'ஆரக்கிள்' (Oracle) மேற்கொண்டுள்ள பெருமளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைகள், இந்தியாவில் உள்ள ஊழியர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையால் தயாரிப்புப் பொறியியல் (product engineering) பிரிவுகளைச் சேர்ந்த குழுக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தியாவில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை அல்லது ஆட்குறைப்பு நடவடிக்கையின் அளவு குறித்து ஆரக்கிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.