உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில், படுக்கை வசதி கொண்ட சுற்றுலாப் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். புதன்கிழமை இரவு யமுனா விரைவுச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்பேருந்தில் மொத்தம் 35 பயணிகள் பயணம் செய்தனர்.
பேருந்தின் குளிர்சாதன அமைப்பில் (ஏசி) ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வெடிப்பினால் என்ஜினில் இருந்த மசகு எண்ணெய் (lubricating oil) தீப்பற்றியதாகவும், அதனால் தீ வேகமாகப் பரவியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.