இந்தியாவில் ஆப்பிள் பே அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும் ஒரு கட்டணச் சேவையாகும்.
தற்போது, ஆக்ஸிஸ் வங்கியின் (Axis Bank) விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (Mastercard) கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் பே சேவையில் பயன்படுத்தலாம். இந்தியாவில் விரைவில் மேக் (Mac) சாதனங்களிலும் இச்சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.