சீனாவின் திபெத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவாகியுள்ளது. திபெத்தின் தலைநகரான லாசாவிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடக்கு திபெத்தின் 'நாக்சு' (Nagqu) பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.
2024 ஜனவரி மாதத்திற்குப் பிறகு சீனாவில் ஏற்பட்டுள்ள மிக வலிமையான நிலநடுக்கம் இதுவாகும். இப்பகுதியில் ரிக்டர் அளவில் 5 தீவிரத்தன்மை கொண்ட நில அதிர்வும் (aftershock) பதிவாகியுள்ளது. நேபாளம்-சீனா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், தற்போது இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.