தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் இருவர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்; விருதுநகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மாநிலம் முழுவதும் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஐந்து மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' (Orange Alert) அறிவிக்கப்பட்டுள்ளது.