ஹார்முஸ் நீரிணை தொடர்பாக இந்தியா, ஈராக், சீனா மற்றும் கத்தார் ஆகிய நான்கு நாடுகளுக்கு ஈரான் விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் இனி ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையின்றிச் செல்லலாம் என்றும், அமெரிக்க ராணுவத்தால் அவை இடைமறிக்கப்படாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அகமது ஹயாத்-மொகத்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகச் செய்தி முகமைகள் தெரிவித்துள்ளன.