பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவிற்கு, நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்களிடமிருந்து மிரட்டல் செய்தி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியை அனுப்பிய நபர் பல கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக மும்பை காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது அந்த ஆடியோ பதிவை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.