ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய விதிமீறல்களை வரையறுத்து, அவற்றுக்கான கட்டுப்பாடுகளையும் கடுமையான நிபந்தனைகளையும் உள்ளடக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
24 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் செயல்பாடுகளை இடைநிறுத்துதல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதில், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே மதச் சடங்குகளை நடத்துதல், அங்கீகரிக்கப்படாத நன்கொடைகளைப் பெறுதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் அதிகாரப்பூர்வத் தொடர்புகளைப் பேணுதல் போன்றவை அடங்கும்.