கனடிய உச்ச நீதிமன்றம்: மதச் சின்னங்கள் மீதான தடையை உறுதி செய்தது; மக்கள் பிரதிநிதிகள் முகத்தை மறைக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை ரத்து செய்தது

By: 600001 On: Nov 28, 2026, 1:59 PM

 

 

ஒட்டாவா: கியூபெக் மாகாணத்தில் பொதுத்துறை ஊழியர்கள் மதச் சின்னங்களை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை (மசோதா 21) கனடாவின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள், பணியில் இருக்கும்போது ஹிஜாப், தலைப்பாகை, சிலுவை போன்ற மதச் சின்னங்களை அணியக்கூடாது என்ற தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.

நீதிமன்ற அமர்வில் இருந்த ஏழு நீதிபதிகளில் ஆறு பேர், அரசியலமைப்பின் 'நாட்வித்ஸ்டாண்டிங் கிளாஸ்' (பிரிவு 33 - 'எது எப்படியிருப்பினும்' என்ற விதி) மூலம், சில அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரம் உண்டு என்று உறுதிப்படுத்தினர்.

அதேவேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் முகத்தை மறைக்காமல் இருக்க வேண்டும் என்று கியூபெக் அரசாங்கம் விதித்த கட்டுப்பாட்டை நீதிமன்றம் ஒருமனதாக ரத்து செய்தது. இக்கட்டுப்பாடு ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.