நியூயார்க்: சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் ஜியின் பிறந்தநாளைக் குறிக்கும் 'குர்புரப்' (Gurpurab) கொண்டாட்டங்களில், நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி கலந்துகொண்டார். குயின்ஸின் ரிச்மண்ட் ஹில்லில் உள்ள 'குருத்வாரா சாஹிப் பாபா மக்கன் ஷா லோபானா' மையத்தில், சீக்கிய சமூகத்தினருடன் அவர் இணைந்து கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, மேயர் ஒரு பிரத்யேக காலணி (walking boot) அணிந்து, ஊன்றுகோல்களின் உதவியுடன் நிகழ்விடத்திற்கு வந்தார். நவம்பர் 19 அன்று செய்தியாளர்களுடன் விளையாடிய நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியின் போது, அவரது காலில் தசைநார் காயம் ஏற்பட்டது.
சீக்கிய மரபுப்படி, குருத்வாராவிற்குள் நுழைவதற்கு முன்பு அவர் தனது தலையை மறைத்துக்கொண்டார். மேலும், அங்கு கூடியிருந்தவர்களிடம் பஞ்சாபி மொழியில் 'குர்புரப்' நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, சீக்கிய கலாச்சார சங்கம் (Sikh Cultural Society) சார்பில் மேயர் கௌரவிக்கப்பட்டார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குர்பானி கீர்த்தன் (ஆன்மீகப் பாடல்கள்), சேவை (நிஸ்வாத்த சேவை) மற்றும் லங்கர் (சமூக உணவு) ஆகியவை இடம்பெற்றன. முன்னதாக, நவம்பர் 17 அன்று குயின்ஸில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.